
பிரபல பிரெஞ்சு நடிகை ஜேன் பிர்கினுக்காக 1984 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட முதல் ஹெர்ம்ஸ் பிர்கின் பை, பாரிஸில் நடந்த சோத்பீஸ் ஏலத்தில் ₹83 கோடிக்கு (சுமார் $10 மில்லியன்) விற்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த கைப்பையாக சாதனை படைத்துள்ளது.
ஒன்பது அரிய பொருள்கள் சேகரிப்பாளர்களிடையே நடந்த போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு தனியார் சேகரிப்பாளர் இந்த பையை €8.6 மில்லியன் (₹83 கோடிக்கு) வாங்கியிருக்கிறார்.
ஏலம் 1 மில்லியன் யூரோவில் தொடங்கிய நிலையில் கமிஷன் மற்றும் கட்டணங்களுடன் 8.6 மில்லியனுக்கு இந்த பை இறுதியாக விற்பனையாகியுள்ளது.
ஏன் இவ்வளவு விலை?
சோத்பீஸின் கைப்பைகள் மற்றும் ஃபேஷன் பிரிவு தலைவர் மோர்கன் ஹலிமி இந்த விற்பனை குறித்து கூறுகையில், “இது ஃபேஷன் வரலாற்றில் மைல்கல், ஜேனின் தனிப்பட்ட பயன்பாடு, பையின் வரலாறு, மற்றும் அதன் தனித்தன்மை தான் இதன் மதிப்பை உயர்த்தியுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார்.
2021-ல் ஒரு வெள்ளை முதலை தோல் பிர்கின் பை ₹4.2 கோடிக்கு விற்கப்பட்டது. தற்போது ஜேனின் இந்த முதல் பிர்கின் பை அதை முறியடித்ததுள்ளது.
ஜேன் பிர்கின் யார்?
ஜேன் பிர்கின் ஒரு பிரபல பிரெஞ்சு – பிரிட்டிஷ் நடிகை, பாடகி மற்றும் ஃபேஷன் ஐகான் ஆவார். பிரான்ஸ் திரையுலகில் தனது தனித்துவமான பாணி மற்றும் எளிமையான அழகுக்காக அறியப்பட்டவர்.
2023-ல் காலமான ஜேன், “லா பிசின்” படத்தில் நடித்து புகழ் பெற்றவர். அவரது ஸ்டைலான தோற்றம் பிரெஞ்சு பாணியின் அடையாளமாக கருதப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…