
பித்தோர்கர்: உத்தராகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாக மேற்கொள்ளப்படும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் பொறுப்பு வகிக்கிறது.
இதன் தார்ச்சுலா அடிவார முகாம் பொறுப்பாளர் தன் சிங் பிஷ்த் நேற்று கூறியதாவது: தார்ச்சுலா முகாமில் இருந்து 45 பக்தர்களை கொண்ட முதல் குழுவினர் குஞ்சியிலிருந்து 4,104 அடி உயரத்தில் உள்ள நபிதாங்கை செவ்வாய்க்கிழமை அடைந்தனர். அவர்கள் காலநிலைக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள மறுநாள் முழுவதும் அங்கு தங்கினர்.