
சிவகாசி: “தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. விஜய் நிலைப்பாட்டில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 'தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்' பேரணி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆட்சிக்கு வந்து 50 மாதங்களை கடந்த பின், தேர்தல் வருவதால் ஓரணியில் தமிழ்நாடு எனக்கூறி மக்களை குழப்ப பார்க்கின்றனர். தமிழ்நாடு மக்கள் வருமானம் இன்று தவித்து வரும் நிலையில் ஸ்டாலின் குடும்பம் தான் ஓரணியில் சுபிட்சமாக உள்ளது.