
விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: ஃபெஞ்சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்கொள்ளாததால் விழுப்புரம் நகரமே தண்ணீரில் மிதந்தது.