
கும்பகோணம் / விழுப்புரம்: பாமக-வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஐந்து வயது குழந்தைபோல நான் உள்ளதாக ஒருவர் (அன்புமணி) கூறினார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவராக்கியது. தந்தை சொல்மிக்கமந்திரம் இல்லை.
எனவே, என் பேச்சை கேட்கவில்லை என்பதால், அவர் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. எனது இனிஷியலை வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.