• July 11, 2025
  • NewsEditor
  • 0

ட்டச்சத்து மூலம் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில், குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் சமீபமாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட், பர்கர், பீட்சா எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம். மைக்ரோ கீரைகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பேசுகிறார் உணவியல் ஆராய்ச்சியாளர் சிவப்ரியா மாணிக்கவேல்.

மைக்ரோ கீரைகள்

காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது.

முளைகளும் மைக்ரோ கீரையும் ஒன்றல்ல. முளைகள் பொதுவாகச் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குல உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளர்க்கப்படுகிறது. முளை வளர்வதற்குச் சூரிய ஒளியும் மண்ணும் தேவையில்லை. ஆனால், மைக்ரோ கீரை மண்ணில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படுகின்றன.

மைக்ரோ கீரைகளின் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும். இதுதவிர உண்ணும் உணவுக்கு மொறுமொறுப்பான (Crunchy) தன்மையைக் கொடுக்கிறது. கொத்தமல்லி, வெந்தயம், புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, கடுகுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை மற்றும் கோதுமைப்புல் ஆகியவை நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோ கீரைகள்.

மைக்ரோ கீரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் என்சைம்களும் நிறைந்தவை. மைக்ரோ கீரைகளை என்சைம்களின் ‘ஸ்டோர் ஹவுஸ்’ என்று கூறலாம். இந்த என்சைம்கள் செல்களின் சரியான வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் அபிவிருத்திக்கும் அத்தியாவசியமானவை.

மைக்ரோ கீரைகள்
மைக்ரோ கீரைகள்

மைக்ரோ கீரைகளில் நீண்டநாள் இளமையாக இருப்பதற்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடல் எடை இழக்க விரும்புபவர்கள், தினமும் தங்கள் உணவுப் பட்டியலில், இதை ஒரு சிறிய அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பிய மைக்ரோ கீரைகள் நோய் வருவதை தடுக்கும். இவற்றிலுள்ள புத்தம் புதிய குளோரோபில், சக்தி வாய்ந்த ரத்தச் சுத்திகரிப்பானாகச் செயல்படும்.

சிவப்பு முட்டைகோஸின் இளம் கீரைகளில் வைட்டமின் ‘சி’, ‘கே’ மற்றும் ‘இ’ நிறைந்துள்ளன. கொத்தமல்லியில் கண்களுக்கு நலம் புரியும் லுடீன் (Lutein) மற்றும் பீட்டா கரோட்டின் (Beta Carotene) மிகுதியாக உள்ளன.

மேலும், புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், புற்றுநோய்ச் செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயக்கீரை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தவை. வெந்தயக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தச்சோகை சரியாக உதவுகிறது.

சிவப்பு முட்டைகோஸ் மைக்ரோ கீரை
சிவப்பு முட்டைகோஸ் மைக்ரோ கீரை

சிவப்பு முட்டைகோஸ், கொத்தமல்லி மற்றும் முள்ளங்கி போன்ற மைக்ரோ கீரைகளில் முதிர்ந்த கீரைகளைவிட 40 மடங்கு அதிகளவு சத்துகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோ கீரை இரண்டு, மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால், அவை வளரும் மண்ணுக்குப் பூச்சிக்கொல்லிகளோ அல்லது களைக்கொல்லிகளோ பயன்படுத்தத் தேவையில்லை. அதனால், இது ரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகளை உட்கொள்ள வழி செய்கிறது” என்கிறார் சிவப்ரியா மாணிக்கவேல்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *