
சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒருகாரணமாக இருந்தாலும், இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணமாக தெரிவிக்கப்பட்டது.