
ஒரு இளைஞர் தனது வெறும் கைகளால் ராட்சத கிங் கோப்ரா பாம்பைத் தைரியமாகப் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த 11 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு இளைஞர் ராட்சத கிங் கோப்ராவை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்து, “கிங் கோப்ராவின் உண்மையான நீளம் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தியாவில் இது எங்குக் காணப்படுகிறது? அதைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்?” என பர்வீன் கஸ்வான் வீடியோவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
கிங் கோப்ரா எங்குக் காணப்படும்?
உலகின் மிக நீளமான விஷப் பாம்பு இனங்களில் ஒன்று இந்த கிங் கோப்ரா பாம்புகளாகும். இது 18 அடி (5.5 மீட்டர்) வரை வளரக்கூடியது.
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பாம்புகள், பொதுவாக அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவில், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இவை அதிகம் காணப்படுகின்றன.
இவற்றின் கொடிய விஷமும், பயமுறுத்தும் தோற்றமும் இருந்தாலும், கிங் கோப்ராக்கள் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமீபத்தில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பேப்பாறா அருகே பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், ஒரு பெரிய கிங் கோப்ராவை ஒரு நீரோடையிலிருந்து துணிச்சலுடன் மீட்கும் வீடியோ வைரலானது.
If you ever wondered about the real size of King cobra. Do you know where it is found in India. And what to do when you see one !! pic.twitter.com/UBSaeP1cgO
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 8, 2025