
ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ரோஹ்ரு நகரில் 65 வயது மூதாட்டி வசித்து வந்தார். கணவரை இழந்த அவர், தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிம்லா காவல்நிலையத்தில் அந்த மூதாட்டி புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், “ஜூலை 3-ம் தேதி மதியம் என் வீட்டுக்கு வந்த என் பேரன் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக பிஎன்எஸ் பிரிவுகள் 64(2) (பாலியல் வன்கொடுமை), 332(பி) 351(3) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 25 வயது நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
அதே போல மகாராஷ்டிரா மாநில காவல்நிலையத்தில் பதிவான ஒரு புகாரில், “என் முதல் கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன்.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அஷ்ரப் சவுத்ரி என்பவர் அறிமுகமானார். அவருடன் நட்பாகப் பழகிவந்தோம். இந்த நிலையில், அஷ்ரப் சவுத்ரி என் கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்.

இதற்கிடையில், என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் உறவிலிருந்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை துபாய்க்குத் தப்பிச் செல்ல முயன்ற அஷ்ரப் சவுத்ரியைக் கைது செய்திருக்கிறது.