• July 10, 2025
  • NewsEditor
  • 0

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்த விசாரணையில், “எங்கள் முதல்கட்ட விசாரணையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடத் துவங்கியபோது, வேன் டிரைவர் வேனை வேகமாக இயக்கியிருக்கிறார். அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. கேட் மூடப்படவில்லை என்பதும், ஆளில்லா ரயில்வே கேட் என்பது உண்மைக்கு புறம்பான தகவல்’ என்றும் தெரிவித்திருக்கிறது தெற்கு ரயில்வே.

மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மொழி தெரியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

ஆனால், எஸ்.பி ஜெயக்குமார்ர், “அந்தப் பள்ளி வேனில் நான்கு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதில் இருவர் உயிரிழந்துவிட்டனர். கேட் போடாததால்தான் நான் போனேன் என்று கூறுகிறார் வேன் டிரைவரான சங்கர். அதனால் முழுமையான விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும்” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாதுகாப்பு தொடர்பான சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

அதில், “அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

ரயில்வே கேட்களை இண்டர் லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும். இண்டர் லாக்கிங்கிற்கு மாற்றப்படாத பகுதிகளில், ரயில்வே கேட்களை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

அஸ்வினி வைஷ்ணவ்

இண்டர் லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். பொதுமக்களே மூடி, திறக்கும் ரயில்வே கேட்களை கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்வே கேட்கள் மற்றும் அடிக்கடி பிரச்னைகள் வரக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதுகுறித்து ஆய்வுசெய்ய 15 நாள் பாதுகாப்பு ஆய்வு இயக்கம் இன்று (10 ஜூலை) முதல் தொடங்கப்படவுள்ளது.

சாத்தியமான இடங்களில் லெவல் கிராசிங்குகளை அகற்றுவதற்காக, சாலை மேம்பாலம் (ROB), சாலைக்கு அடியில் பாலங்கள் (RUB) மற்றும் வரையறுக்கப்பட்ட உயர சுரங்கப்பாதைகள் (LHS) ஆகியவற்றை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

அனைத்து LC வாயில்களிலும் வேகத்தடைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் ஒழுங்குபடுத்தப்படும்.” என்று அறிவித்திருக்கிறது ரயில்வே அமைச்சகம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *