
சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக மெரினா நீச்சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்காது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நீச்சல்குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டண அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.