
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழிலுக்கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடைபெற உள்ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க முதலீட்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக மது உற்பத்தியை ஊக்குவிக்கும் முதலீட்டு மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை லக்னோவின் இந்திரா காந்தி பிரதிஷ்டானில் மாநில கலால் துறை நடத்துகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் எனவும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.