
ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இயக்குநர் ராம் பேசும்போது, "நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் திரைக்கு வர வேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள்.