• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வல்​லக்​கோட்டை முரு​கன் கோயி​லில் நடந்​தது வன்​கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை குற்​றம்​சாட்டி உள்​ளார். காஞ்​சிபுரம் மாவட்​டம் வல்​லக்​கோட்டை முரு​கன் கோயில் கும்​பாபிஷேக விழா​வில் பங்​கேற்க ‘‘தனக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தாக​வும், அதற்கு சாதிய ஒடுக்​கு​முறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்​து​விட முடி​யாது’’ என்று காங்​கிரஸ் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

மேலும், ‘‘வழி​பாட்​டுத் தீண்​டா​மையை ஒழிக்க வேண்​டும். செல்​வப்​பெருந்​தகையை சாதி அடிப்​படை​யில் தடுத்து நிறுத்​தி​னார்​களா?’’ என்​பதை விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என விசிக எம்​.பி. ரவிக்​கு​மார் தெரி​வித்​திருந்​தார். மேலும், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சி​யினரும் கண்​டனம் தெரி​வித்​திருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *