
புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
உலக அளவில் ரயில் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பாளராக மாற வேண்டும் என்பதும் உள்நாட்டில் செலவு குறைந்த சரக்கு போக்குவரத்துக்கு முதுகெலும்பாக மாற வேண்டும் என்பதும் இந்திய ரயில்வேயின் நீண்டகால தொலைநோக்கு பார்வை. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல புல்லட் ரயில் திட்டத்தை 2027-ல் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.