
புதுடெல்லி: நாடு முழுவதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்பொழிவு நிறைந்த பகுதியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும் மற்ற பகுதிகளில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுகிறது.
இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.