
திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியவில்லை’ எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோருக்கு அறுதல் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கண்ணை மூடினாலே இதுதான் எனது மனதிற்கு வருகிறது. அந்தப் பெண் ஓர் உயிர். கொடூரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஆனால் சரியான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் செய்தியைக் கேட்பதற்கே பயமாக இருக்கிறது.
ரிதன்யாவின் பெற்றோர் இடத்தில் இருந்து நான் யோசித்துப் பார்க்கிறேன். மற்ற நாடுகளில் கொடுக்கிற மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும். உடனே தண்டனையைக் கொடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். இனி இன்னொரு உயிர் போகக்கூடாது.

ஒருவரின் கண்ணீரைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கே சிலர் இங்கு இருக்கிறார்கள். நடந்த கொடுமைக்கு இன்னும் ஏன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. கடைசி 5 நிமிடம் அந்த பெண்ணின் மனது எவ்வளவு அவஸ்தை பட்டிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது” என்று மனவேதனையுடன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…