
நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து அவர், இந்தியில் ஹிட்டான ‘கில்’ என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.
நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்ஷயா, ராகவ் ஜூயல், தன்யா, ஆசிஷ் வித்தியார்த்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்த இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.