
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படாததால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மாணவர்கள், குழந்தைகள் உட்பட படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து மேலும் தகவல்கள் இந்த பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்…