
சென்னை: நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சந்திரமுகி’ பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃளிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் ‘நானும் ரவுடி தான்’ பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.