
சென்னை: எஸ்சி, எஸ்டி மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்திருக்கிறார். முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்திருக்கிறாரா?. மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், நிதி ஒதுக்கி விடுதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, இஎஸ்ஐ பயனாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்களை தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவி உபகரணங்களை வழங்கினார்.