• July 7, 2025
  • NewsEditor
  • 0

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின், சமீபத்திய X பதிவு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. ”உலகின் அழகான கிராமங்களில் ஒன்றாக கருதப்படும் கேரளாவின் கடமக்குடி தீவுக்கூட்டத்திற்கு வர விரும்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில், “கடமக்குடி கேரளாவில் உள்ள உலகின் மிக அழகான கிராமங்களில் ஒன்று என்று சொல்லப்படுகின்றது. டிசம்பரில் என் வணிகப் பயணத்திற்காக கொச்சி செல்லும் போது கடமக்குடியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அது கொச்சியில் இருந்து அரை மணி நேர பயணம் தான்,” என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் அந்த இடத்தின் அழகைக் காட்டும் ஒரு வீடியோவும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ மற்றும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் கடமக்குடியில் தங்கள் அனுபவங்களை, புகைப்படங்களை பகிர்ந்தனர்.

கடமக்குடி எங்கு உள்ளது?
கொச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இது இருக்கிறது. வரப்புழை என்ற நகரம் அதற்கருகில் உள்ளது. இங்கு பின்நீர்பாதைகள்(Backwaters), நெல் வயல்கள், படகுச்சவாரி, பறவைகள் பார்வையிடுதல், இறால் வளர்ப்பு போன்ற கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

புக்கலி நெல் சாகுபடிக்கு இப்பகுதி பிரபலமானது. இந்த நெல் வகை உப்புத்தன்மையை எதிர்க்கும் திறன் கொண்டது. மேலும் 2008 ஆம் ஆண்டு புவி அடையாள சான்று (GI tag) பெற்றுள்ளது.

ஆனந்த் மஹிந்திராவின் பதிவை தொடர்ந்து பலரும் அந்த இடத்திற்கு செல்ல முற்பட்டுவருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *