• July 7, 2025
  • NewsEditor
  • 0

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா, மாநில அரசாங்க அழைப்பின் பேரில் கேரளாவுக்கு வந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜோதி மல்ஹோத்ரா, Travel with Jo என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த இவர், 2024–2025 இல் கேரளா சுற்றுலாத்துறை நடத்திய ‘influencer’ பிரச்சார திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அந்த திட்டத்தின் கீழ் அவரது பயணம், தங்குமிடம் மற்றும் சுற்றுலா செலவுகள் அனைத்தும் கேரளா அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இது கேரளா மாநிலத்தை, உலகளவில் பிரபலமான சுற்றுலா இடமாக்குவதற்கான முயற்சியாகும்.

பாகிஸ்தானுடன் சந்தேகத்திற்கிடமான தொடர்புகள்?

இந்திய உளவுத்துறையின் தகவலின்படி, ஜோதி மல்ஹோத்ரா கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார். அங்கு பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து தகவல்கள் வழங்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உளவு

பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் உளவுத்துறையின் உதவியுடன் செயல்பட்டதாக சந்தேகத்தின் பேரில் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பில் உளவுத்துறை

இந்த சம்பவம், அரசு நிதியில் நடத்தப்படும் பிரச்சாரங்களில் பங்கேற்கும் சமூக வலைதள பிரபலங்களுக்கான பின்னணி சோதனை முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜோதி மல்ஹோத்ரா யூடியூப் சேனலில் 487 வீடியோக்கள் உள்ளன.

ஜோதி மல்ஹோத்ரா

அவை பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து மற்றும் இந்திய மாநிலங்களை பற்றிய பயண வீடியோக்களாக இருந்தாலும், தற்போது அவை உளவுத்துறை கண்காணிப்பில் உள்ளன. பயண வீடியோக்களின் பெயரில் ரகசிய தகவல்கள் திரட்டப்பட்டிருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கைது, அரசு திட்டங்களில் பங்கேற்கும் நபர்களை சரிவர பரிசோதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடுகள் உள்ளதா? என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *