• July 7, 2025
  • NewsEditor
  • 0

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர்.

அந்த மாணவர், அவரது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றதாக மற்றொரு இளைஞர் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரின் வீட்டிற்கு மாணவரின் தந்தை சென்றார்.

அங்கு படுக்கையில்மாணவர் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் அவரது 19 வயது நண்பர் அமர்ந்து இருந்தார். அவரது தந்தை மருத்துவரை வரவழைத்து சோதித்து பார்த்தார். இதில் அந்த பதின்பருவ மாணவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறினார்.

மரணம்

இது குறித்து அவர் நண்பரிடம் விசாரித்தபோது, குடிக்க குளிர்பானம் கொடுத்ததாகவும், குடித்தவுடன் வாந்தி எடுத்ததாகவும் அவரது நண்பர் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவரின், நண்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில்,”குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

போலீஸாரின் விசாரணையில், நான்கு மாதத்திற்கு முன்பு அந்த மாணவரை 19 வயது நண்பர் நாக்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவர் தனது பெற்றோரிடம் சொல்லாமல் நாக்பூர் சென்று வந்தார். வந்த பிறகு நண்பரிடம் இருந்து விலகி இருக்கும்படி அவனது பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே மாணவரும், அவரது நண்பரை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அந்த வாலிபர் கோபத்தில் மாணவரை கொலை செய்யதிட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. 16 வாலிபருக்கும், 19 வாலிபருக்கும் `தன்பாலின ஈர்ப்பு’ இருந்ததாக கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *