
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'. லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், சரவணன், மாளவிகா, போஸ் வெங்கட், மணிகண்டன், மு. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விஜய் கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில், சசிகுமார் பேசும்போது, “பிரீடம், மனதுக்கு நெருக்கமான படம். லிஜோமோல் வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாகிவிட்டது. இது, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரி காமெடியாக இருக்காது. இது சிறையில் படும் கஷ்டத்தைச் சொல்லும் படம். பார்வையாளர்களுக்கு அதைத் தெளிவு படுத்தி விட வேண்டும்.