
புரி: புரி ஜெகந்நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
கடந்த 1460-ம் ஆண்டில் அப்போதைய கலிங்க மன்னர் கபிலேந்திர தேவா, தக்காணத்து போர்களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்களுடன் ஒடிசா திரும்பினார். இந்த தங்க நகைகள், வைரங்களை புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.