
ரேவா: பழங்கால நாணயங்களுக்கு ரூ. 2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்த 65 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. பழங்கால நாணய நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு அலங்கார மற்றும் பாரம்பரிய நோக்கங்களுக்காக அரசு பழங்கால நாணயங்களை வாங்குவதாகவும் அதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார்.