
பாமக நிறுவனர் ராமதாஸ் புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாக குழு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், அந்தப் பட்டியலில், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.
இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர்.
கலைத்த ராமதாஸ்
கடைசியாக, பாமக தலைவர் பதவியில் மூச்சிருக்கும் வரை, நானே தொடர்வேன் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார்.
முன்பு, பாமகவில் தலைமை நிர்வாக குழு செயல்பட்டு வந்தது. ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே நடந்துவரும் மோதலால், இந்தக் குழுவை ராமதாஸ் கலைத்து, புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார்.
அதில் தான், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை.
பாமகவினர் நினைப்பது…
இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட வேண்டும். அப்போது தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாமகவினர் கருதுகிறார்கள்.
ஆனால், இவர்கள் இருவரின் மோதல் போக்கு தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.