• July 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர் வாதாடி​னார்.

அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்தை (ஏஜேஎல்) சுதந்​திரத்​துக்கு முன்பு ஜவகர்​லால் நேரு தொடங்​கி​னார். இதில் 5,000-க்​கும் மேற்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் பங்​கு​தா​ரர்​களாக இருந்​தனர். இதன் சார்​பில் நேஷனல் ஹெரால்டு உள்​ளிட்ட சில பத்​திரி​கைகள் வெளி​யா​யின. நிதி நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், இந்​நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்​தது. இதை திருப்​பிச் செலுத்​தாத நிலை​யில், இந்​நிறு​வனத்​தின் பங்​கு​கள் வெறும் ரூ.50 லட்​சத்​துக்கு யங் இந்​தியா நிறு​வனத்​துக்கு மாற்​றப்​பட்​டது. இந்​நிறு​வனத்​தின் 76 சதவீத பங்​கு​கள் காங்​கிரஸ் தலை​வர் சோனி​யா, ராகுல் ஆகியோருக்கு மாற்றப் பட்டன. ஆனால், ரூ.2,000 கோடி மதிப்​புள்ள ஏஜேஎல் நிறு​வனத்​தின் பங்​கு​களை மாற்​றிய​தில் முறை​கேடு நடந்​த​தாக சோனியா காந்​தி, ராகுல் காந்தி மீது குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *