
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நடப்பாண்டில், 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூன் 29-ம் தேதி அணை முழு கொள்ளளவான 120 அடியைஎட்டியது. தொடர்ந்து அணைக்கு வந்த நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.