• July 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரிட்​டன் கடற்​படைக்கு சொந்​த​மான எப்​-35பி ரக விமானம் கடற்​பரப்​பில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது திடீரென ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக கேரளா​வின் திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில் 19 நாட்​களுக்கு முன்பு அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது.

அதி நவீன போர் விமான​மாக கருதப்​படும் இது உலகின் மிக​வும் அதி​கபட்ச விலை​யுடைய விமான​மாக கருதப்​படு​கிறது. ஒரு விமானத்​தின் விலை 110 மில்​லியன் டாலர். அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.924 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், எப்​-35பி விமானத்தை பழுது​பார்க்​கும் முயற்​சிகள் தோல்​வியடைந்து விட்​டதையடுத்து அதனை சி-17 குளோப்​மாஸ்​டர் சரக்கு விமானம் மூல​மாக மீண்​டும் பிரிட்​ட​னுக்கே கொண்டு செல்ல பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது. எப்​-35பி விமானத்தை சரக்கு விமானத்​தில் ஏற்ற வேண்​டு​மா​னால் அதற்கு லாக்​ஹீட் மார்​டினில் பயிற்சி பெற்ற பொறி​யாளர்​கள் மட்​டுமே அதனை செய்து முடிக்க முடி​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *