
பாட்னா: காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தீவிர சிறப்பு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது, பிஹார் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும் அவர்களின் அடிப்படை வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும். இதனால், 2 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகி உள்ளது.
அதிகாரம் என்பது நிலையற்றது. அது நாளை யார் கையில் வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் ஏன் அவர்களுக்கு (பாஜக) இவ்வளவு அடிமையாக இருக்கிறீர்கள்?. நீங்கள் (தேர்தல் ஆணையம்) அரசியலமைப்பை பின்பற்றினால் நல்லது. இவ்வாறு பவன் கேரா கூறினார்.