• July 5, 2025
  • NewsEditor
  • 0

கோவை மருதமலை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (வயது 68). இவர் அங்கு புதிதாக வீடு கட்டி வந்தார். இதற்கான பணிகளை 23 வயது பெண் கட்டிட கலை நிபுணரிடம் கொடுத்து கண்காணித்து வந்தார்.

கடந்தாண்டு ஆனந்த கிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக அந்தப் பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துள்ளார்.

ஆனந்த கிருஷ்ணன்

அதனடிப்படையில் வீட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு, காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆனந்த கிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில் ஆனந்த கிருஷ்ணன் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே ஆனந்த கிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததை போட்டோ, வீடியோ எடுத்து பெண்ணை பிளாக் மெயில் செய்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதில் வேதனையடைந்த அந்தப் பெண் மனோஜ் பாண்டியன் என்ற வழக்கறிஞரை அணுகி, இந்தப் பிரச்னைக்கு தீர்வளிக்குமாறு கேட்டுள்ளார். அவருக்கு நம்பிக்கை கூறிய மனோஜ், மறுபக்கம் ஆனந்த கிருஷ்ணனிடம் பேசியுள்ளார்.

மனோஜ் பாண்டியன்

ஆனந்துடன் இணைந்து மனோஜ் பாண்டியனும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவி புகார் அடிப்படையில் மனோஜ் பாண்டியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  பாதிக்கப்பட்ட பெண் மனோஜ் பாண்டியன் மீது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலிலும் புகார் அளித்திருந்தார்.

பார் கவுன்சில்

அதனடிப்படையில் மனோஜை கடந்த டிசம்பர் மாதமே 6 மாதங்களுக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில் அவரை மேலும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *