• July 5, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் பாஜக நிர்​வாகி பிர​வீன் நெட்​டூரு கொல்​லப்​பட்ட வழக்​கில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) அதி​காரி​கள் கேரளா​வில் உள்ள கண்​ணூர் விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர்.

கர்​நாடக மாநிலம் தக்​ஷின கன்​னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செய​லா​ளர் பிர​வீன் நெட்​டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்​களால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். தேசிய புல​னாய்வு முகமை வழக்​குப்​ப​திவு செய்​து, 14 பேரை கைது செய்​தனர். இவ்​வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி​கள் 6 பேர் தலைமறை​வாக இருந்​த​தால் அவர்​களை தேடி வந்​தனர். கர்​நாடகா மட்​டுமல்​லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்​களி​லும் தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில் நேற்று முன் தினம் இரவு கேரள மாநிலம் கண்​ணூரில் உள்ள விமான நிலை​யத்​தில் தலைமறை​வாக இருந்த அப்​துல் ரஹ்​மானை கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *