
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 19,286 கனஅடியாகவும், மதியம் 24,735 கன அடியாகவும், மாலை 29,423 கனஅடியாகவும் அதிகரித்தது.