• July 4, 2025
  • NewsEditor
  • 0

‘கில் இரட்டைச்சதம்!’

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் மட்டும் 269 ரன்களை எடுத்திருந்தார்.

கில்

இங்கிலாந்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் எனும் பெருமையை கில் பெற்றிருக்கிறார். அதேமாதிரி, SENA நாடுகளில் இரட்டைச் சதமடித்த முதல் ஆசிய கேப்டன் எனும் சாதனையையும் செய்திருக்கிறார்.

‘நேற்றைய நாளின் முடிவில் கில்…’

இந்நிலையில் நேற்றைய நாளின் முடிவில் பேசியல் கில், ‘ஐ.பி.எல் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்திலேயே, டெஸ்ட் போட்டிகளை மனதில் வைத்து சில முக்கியமான விஷயங்களை செய்திருந்தேன். இப்போது என்னுடைய பேட்டிங்கை பார்க்கையில் அதெல்லாம் சரியாக வேலை செய்திருக்கிறது என நினைக்கிறேன். கடந்த போட்டிக்குப் பிறகு பீல்டிங்கை பற்றி அதிகம் பேசினோம்.

கில்
கில்

அந்தப் போட்டியில் பீல்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். நான் இரண்டு நாட்களாக பேட்டிங்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் ஸ்லிப்பில் பிடித்த அந்த கேட்ச் எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. இந்த போட்டிக்கே நம்பிக்கையை மூலதனமாக கொண்டுதான் வந்தோம். டாஸில் தோற்று பேட்டிங் கிடைத்தாலும் 400 ரன்களை கடந்துவிட்டால் நாங்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என நினைத்தோம்.’ என்றார்.

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 77-3 என்ற நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *