• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ கட்சி உறுப்​பினர் சேர்க்கை முன்​னெடுப்​புக்​காக, சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு​வீ​டாகச் சென்று பொது​மக்​களை சந்​தித்​தார். இதே​போல், தமிழகம் முழு​வதும் அமைச்​சர்​கள், நிர்​வாகி​கள் என அனை​வரும் பொது​மக்​களைச் சந்​தித்து அரசின் திட்​டங்​களை விளக்​கியதுடன், உறுப்​பினர் சேர்க்​கை​யிலும் ஈடு​பட்​டனர்.

தமிழக சட்​டப்​பேர​வைக்கு 2026-ம் ஆண்டு பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் திமுக 7-வது முறை​யாக வெற்றி பெறும் முனைப்​புடன் உள்ளது. இதற்​காக பல்​வேறு அடிப்​படை பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக கட்சி உறுப்​பினர்​கள் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் நடவடிக்​கை​யில் திமுக இறங்​கி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *