
சென்னை: செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு மூலம் உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, நீர்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.