• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​விமர்​சனங்​களை பார்த்து கவலைப்​ப​டா​மல் மக்​கள் தேவையறிந்து செயல்படுவதே எனது பணி என்று திருமண விழா​வில் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​னார். இந்து சமய அறநிலை​யத்​துறை சார்​பில், ராஜா அண்​ணா​மலைபுரம், கபாலீஸ்​வரர் கற்​ப​காம்​பாள் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில், 32 ஜோடிகளுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திரு​மணத்தை நடத்தி வைத்​து, சீர்​வரிசைகளை வழங்​கி​னார்.

அப்​போது முதல்​வர் பேசி​ய​தாவது: திமுக ஆட்​சி​யில் 3,177 கோயில்​களுக்கு குட​முழுக்கு நடத்​தி​யிருக்​கிறோம். 997 கோயில்​களுக்கு சொந்​த​மான ரூ.7, 701 கோடி மதிப்​பிலான, 7, 655.75 ஏக்​கர் நிலங்​களை மீட்​டுள்​ளோம். 2,03,444ஏக்​கர் நிலங்​கள் அளக்​கப்​பட்டு பாது​காக்​கப்​பட்​டிருக்​கிறது. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்​பில் 26 ஆயிரம் திருப்​பணி​கள் நடை​பெற்று வரு​கிறது. 12,876 கோயில்​களுக்கு திருப்​பணி​கள் மேற்​கொள்ள அனு​மதி அளிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *