• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டிஜிட்டல் பரிவர்த்​தனை​யில் தவறான வழி​காட்​டு​தல்​களை டாஸ்​மாக் அதி​காரி​கள் வழங்​கு​வ​தாக​வும், இதனால் முன்பை விட வேலைப்​பளு அதி​கரித்​துள்​ள​தாக​வும் டாஸ்​மாக் ஊழியர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். தமிழகம் முழு​வதும் 4,829 டாஸ்​மாக் கடைகள் உள்​ளன. அனைத்து டாஸ்​மாக் கடைகளை​யும் டிஜிட்​டல் மயமாக்​கும் பணி​கள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

குறிப்​பாக, மது​பானங்​களுக்கு டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்தி வாங்​கும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த திட்டத்தை தொடங்​கும் போது, டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்தி மது​பாட்​டில்​கள் வாங்​கு​வோருக்கு அதற்​கான ரசீது வழங்​கப்​படும் எனவும், இதன் மூலம் வெளிப்​படைத் தன்மை அதி​கரிக்​கும், முறை​கேடு​கள் குறை​யும் என தெரிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *