• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் நேற்று பிற்​பகல் வரை வெயில் வாட்டி வதைத்த நிலை​யில், மாலை நேரத்​தில் திடீரென கரு​மேகங்​கள் சூழ்ந்​தன. இதையடுத்​து, சிறிது நேரத்​திலேயே நுங்​கம்​பாக்​கம், கோ​பாலபுரம், அடை​யாறு, கோட்​டூர்​புரம் உள்​ளிட்ட இடங்​களி​லும், அம்​பத்​தூர் உள்​ளிட்ட புறநகர் பகு​தி​களி​லும் மழை பெய்​யத் தொடங்​கியது.

மழை நள்​ளிரவு வரை விட்​டு​விட்டு பெய்​தது. இதனால் வாகன ஓட்​டிகள் அவதிக்​குள்​ளாகினர். சென்​னை​யின் பிர​தான பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. சென்​னை​யில் கடந்த ஒரு வார​மாக வெயில் சுட்​டெரித்த நிலை​யில், நேற்று பெய்த மழை​யால் வெப்​பம் தணிந்து குளிர்ச்​சி​யான சூழல் நில​வியது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *