
சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரமரணமடைந்த அஜித்குமார் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.
“திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் சாரி சொல்லிவிட்டால் போதுமா? பதவி விலக வேண்டும். நிகிதா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த திமுக-வினரை இதுவரை போலீஸ் விசாரிக்காதது ஏன்?
சமூக ஆர்வலர்கள், திரைப்பட ஆர்வலர்கள் எல்லாம் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பவர்கள் அவர்கள் யாரும் ஏன் இந்த மரணத்தைப் பற்றி பேசவில்லை. வாய்மூடி மெளனமாக இருக்கிறார்கள்.

அந்த நிலைமையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. 2026-ல் தமிழ்நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும். லாக்அப் மரணங்கள் இனி தொடரக் கூடாது” என்று திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.