
சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பகுதிகளில் உள்ள பாசனக் கால்வாய்கள் முறையாக தூர் வாரப்பட்டு, ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்று, மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் கடைமடை பகுதிகளைச் சென்றடையும்.