• July 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து சிவன் கோயில்​களுக்கு பாத யாத்​திரை செல்​வது வழக்​கம். அதன்​படி உ.பி.​யில் புனித யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்​லாதவர்​கள் நடத்த தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், கடை உரிமை​யாளரின் பெயர், கைப்​பேசி எண் போன்​றவற்றை கடைக்கு முன்​னர் எழுதி வைக்க வேண்​டும், யாத்​திரை செல்​லும் பாதைகளில் இறைச்​சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டுள்​ளார். யாத்திரைக்கு கடந்த ஆண்​டும் இதே​போல் கட்​டுப்​பாடு வி​திக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *