
சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினராக நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சி மாமன்றத்துக்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிகளுக்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் வரும் ஜூலை 17 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாகவோ தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.