
ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனின் திரைப்படம் காளிதர் லாபட்டா வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் கலந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், “ஒவ்வொரு மனிதனைப் போலவே, நானும் எதிர்மறை விமர்சனங்களுக்கு அதிக கவனம் செலுத்தினேன்.
இன்னும் அனைவரையும் மகிழ்விக்க, திருப்திபடுத்த விரும்பினேன். எல்லா எதிர்மறை விமர்சனங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தினேன். அப்போதுதான் என் மனைவி ஐய்ஸ்வர்யா. `எதிர்மறை விமர்சனங்கள் ஒரு வாத்து நீந்திச் செல்லும்போது அதன் முதுகுபக்கம் இருக்கும் தண்ணீர். நீங்கள் ஏன் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறீர்கள்? நேர்மறையில் கவனம் செலுத்துங்கள்.’ என்பார்.
சில சமயங்களில் மற்றவரை மகிழ்விக்க முயற்சிப்பது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் அதுதான் மகிழ்ச்சி. எனவே, மகிழ்ச்சியை தொலைக்கும் இலட்சியவாதியாக இருக்காதீர்கள். அதே நேரம் என்னால் எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்பதையும் அறிந்திருக்கிறேன்.
சமீபத்தில் எனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையில் விவாகரத்து நடக்கப்போவதாக வந்த செய்திகளை கேட்டபோது வலித்தது. நீங்கள் என் வாழ்க்கையை வாழவில்லை.
இதையெல்லாம் படிப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கென ஒரு குடும்பம் இருக்கும்போது, உங்களைப் பற்றிய இதுபோன்ற செய்தி உங்களைப் பாதிக்கத் தொடங்குகின்றன. எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும், வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எதிர்மறையான செய்திகள் விற்பனையாகின்றன என்பதால் அதை தவறான முறையில் எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார்.