
சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதரரிடமும் விஜய் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
தவெக சார்பில் அஜித்தின் காவல் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். வருகிற 6 ஆம் தேதி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சிவகங்கைக்கு நேரில் சென்று உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
இறந்த அஜித் குமாரின் தாய் விஜய் ஆறுதல் கூற வந்ததை பற்றி பேசுகையில், ‘நடந்த சம்பவம் ரொம்பவே வருத்தமளிக்குது. இப்படி நடக்கவே கூடாது. கொடூரமா இருக்கு. நீங்க மனச தேத்திக்கோங்கன்னு விஜய் சொன்னாரு. அவர் வந்துட்டு போனதுல கொஞ்சம் ஆறுதலா இருக்கு.’ என்றார்.

அஜித் குமாரின் சகோதரர் நவீன் பேசுகையில், ‘எல்லாரோட சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கு. என்ன வேணும்னாலும் நிர்வாகிகள்ட்ட சொல்லுங்க. பார்த்துக்குறேன்னு விஜய் சொன்னாரு. கூடவே 2 லட்ச ரூபாய் நிதியுதவியும் கொடுத்திருக்கிறாரு.’ என்றார்.