
சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
முன்னதாக, உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் அழைத்து ஆறுதல் கூறியிருந்தனர். அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டுமென விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தவெக சார்பில் இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். வருகிற 6 ஆம் தேதி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்

இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சிவகங்கைக்கு நேரில் சென்று உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.