
சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்கு பதிவு செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் திமுக அரசின் அராஜகங்கள், அட்டூழியங்களை பார்க்கும்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் நவீன எமர்ஜென்சி அமலாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது எனவும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, ரவுடி குழுக்களின் ஆட்சி நடக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அட்டூழியங்களும், அராஜகங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. “காவல்துறையினர் மனித மிருகங்களாக மாறி கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொன்று விட்டனர்” என்று ஆளும் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பகிரங்கமாக குற்றச்சாட்டும் அளவுக்கு தான் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது.