• July 2, 2025
  • NewsEditor
  • 0

‘பிளேயிங் லெவன் மாற்றஙகள்!’

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ப்ளேயிங் லெவனில் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் ட்ராப் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Sai Sudharsan

‘ரவி சாஸ்திரி விமர்சனம்!’

போட்டிக்கு முன்பாக வர்ணனையில் பேசிய ரவிசாஸ்திரி, ‘இந்திய அணியின் தேர்வை பார்க்க சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.

போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.

Bumrah

லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *